Saturday 8 August 2015

மனம் எரிந்து தரும் நன்கொடை? நாசம் தரும்! பாபம் சேரும்!

மனம் எரிந்து தரும் நன்கொடை

தானாக முன்வந்து தரும் நன்கொடைகள்
1.நன்கொடை தருபவர்கள் கேட்காமலே அவர்களாகவே முன்வந்து தருவதாக இருந்தால் அவர் ஏழையானாலும் பணக்காரர் ஆனாலும் அவர் தருவதை வாங்கலாம்.

2. கேட்டு பெறும் நன்கொடைகள்

கட்சிக்காரர்களும் ரவுடிகளும் தங்கள் செல்வாக்கை நிருபிக்கவும், தங்களது செல்வாக்கை உயர்த்தி கொள்ளவும், தங்களது செல்வாக்கை காத்துக் கொள்ளவும் மக்களிடம் நன்கொடை வாங்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கலாம். இப்படி நன்கொடை அதிகம் வாங்கி விழாக்களை சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் பெரிய அளவிலும் நடத்தி தங்களது புகழ் பரப்ப இவர்கள் காரணமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் புகழ் பெற முடியாமல் சீக்கிரம் அழிவையே சந்திப்பார்கள். காரணம் அது ஏழைமக்களின் சாபத்துடன் கூடிய நன்கொடைப் பணம். பணக்காரர்கள் தரும் நன்கொடைகளால் அவர்களுக்கு பெரிய அளவில் சிரமம் இருக்காது. அவர்கள் தரும் பணம் அவர்களை பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் ஏழைகளிடமும் இவர்கள் ரூ500 கொடு ஆயிரம் கொடு என்று கேட்கிறார்கள். சாதரண மளிகை கடைக்காரர்களும் காய்கறி கடைக்காரர்களும் இப்பொழுதெல்லாம் சென்னையில் தொழில் நடத்தவே மிகவும் கஸ்டப்படுகிறார்கள். உயர்ந்து வரும் விலைவாசி ஏராளமான செலவுகள் உழைப்பின் வருமானத்தில்  75 சதவீதத்தை விழுங்கும் கடை மற்றும் வீடு வாடகை. போதாக்குறைக்கு அந்த கடைகளுக்கு மின்கட்டணமும் அதிகம். இத்தனை செலவுகளையும் அவர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வரும்பொழுது இந்த சமுதாயப் பெரியவர்கள் செய்யும் காரியம் மிகவும் மோசம். அவர்களிடம் இவ்வளவு கொடு அவ்வளவு கொடு என்று வாய் கூசாமல் 20 பேர் அல்லது 25பேர் மொத்தமாக சென்று கேட்பார்கள். அதில் ஒருவர்கூட அந்த கடையின் வாடிக்கையாளராக இருக்க மாட்டார். வருடத்தில் ஒருவர்கூட ஒருமுறை கூட அந்த கடையில் சரக்கு வாங்கியருக்க மாட்டார்கள். ஆனால் கேட்பதில் ஒன்றும் குறைச்சல் இருக்காது. அந்தக் கடைக்காரன் எங்கே போவான். இதனால் அந்த ஏழைகள் படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. அவர்கள் வயிறு எரிந்து தரும் (மனசுக்குள் கண்டிப்பாக இவன் நாசமா போகனும்னு சபித்துக் கொண்டுதான் தருவார்கள்.) நன்கொடைகளால் எந்த நன்மையும் ஏற்படாது. இப்படி வயிறு எரிந்து தரும் நன்கொடைகளால் அந்த நன்கொடைக்கு காரணமாயிருக்கு கட்சிக்காரணுக்கும் ரவுடிக்கும் சீக்கிரமே முடிவு காலம் நெருங்கிடும். அல்லது அவரது அந்தஸ்தும் செல்வாக்கும் விரைவில் முடங்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் வயிறு எரிச்சலும் மனசெரிச்சலும் இறைவனிடமே  “கடவுளே இவர்களை தண்டியுங்கள் ” என்று அவர்கள் சரணாகதியடைந்து வேண்டும்பொழுது இவர்கள் சீரழிவைதானே சந்திக்க நேரிடும். எப்படிஇவர்கள் தனது செல்வாக்கை இவர்கள் பெருக்க முடியும். எதாவது பெரிய நோய் வந்து முடமாக நேரிடும். அல்லது கைகால் நசுங்கி திரும்ப நடக்கவே முடியாமல் முடமாக நேரிடும். அல்லது உயிரிழக்க நேரிடும். ஆகவே ஏழை மக்களின் சாபம் சும்மா விடாது. அவர்களை ஒரு வழி பண்ணியே தீரும்.

சரியானபடி நன்கொடை வாங்கும் முறைகள்
ஒருவரிடம் நன்கொடை வாங்கவேண்டுமானால் அவருக்கு சொத்துக்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர் வருமாண வரி கட்டியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அப்படிப்பட்டவர் மட்டுமே நன்கொடை தர தகுதியானவர். அதை விட்டுவிட்டு வருமான வரிகூட கட்ட தகுதியில்லாத ஏழைகளிடம் போய் நன்கொடை கேட்பது தர்மமாகாது. அது நாசத்தையே தரும். சிலர் கும்பலாக சேர்ந்துகிட்டு நாங்கள் சுதந்திர தின விழா சிறப்பா கொண்டாடுறேன் என்று சொல்லி கொண்டு வெட்டியாக ஏழைகளின் சாபத்தை பெற்றுக்கொண்டு நடத்தி வருகிறார்கள். இதனால் யாருக்கும் பெருமையில்லை. நன்மையும் இல்லை. நன்கொடை தலைவர்களுக்கு பின்னால் பாபம் சேர்ந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

No comments:

Post a Comment