Tuesday 4 August 2015

நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்

நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்

நடிகர் சரத்குமார் வேலை வாய்ப்பு முகாமை ;துவக்கி வைத்து பேசியதாவது:- ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை மாணவர்களுக்கு  புத்தகங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துவது பெருமைக்குரியது. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் குறிக்கோளான விஷன் 2020 அடைவது நம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. மாணவர்கள் தான் இந்நாட்டின் விதையின் உயிர்நாடி.இந்த ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளையின் பணிகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக கலந்து கொள்கிறேன். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருவது இது தான் முதல் முறை. ராஜஸ்தான் இளைஞர்
அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை ஒரு புதிய புரட்சியை உருவாக்கி அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முனைந்துள்ளது. ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 70 சதவீதம் 100 மதிப்பெண்கள் பெறுவதால், வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அரிதாகிறது. இக்காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை முறியடித்து தைரியமாக துணிந்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும். மகாத்மா காந்தி சொன்னபடி எந்த வேலை என்றாலும் தன்மானத்தோடு ஏற்றுக்கொண்டு அதன் பின் நம் குறிக்கோளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவு கூறுகிறேன். இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார்.

விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி



நடிகர் சரத்குமார் News
நடிகர் சரத்குமார் பிறந்த நாள்
நடிகர் சரத்குமார் பெயரில்
பச்சை பாம்பை கையால் பிடித்து வீசிய நடிகர் சரத்குமார்
மருத்துவமனையில் சிகிச்சை
நடிகர் சரத்குமார் போலீஸில்
நடிகர் சரத்குமார் அவர்கள் பாடிய .
நடிகர் சரத்குமார் விஜய் அசினுக்கு ஆதரவான பேச்சு
நடிகர் சங்க தேர்தல்
நடிகர் சரத்குமார் அறிவிப்பு
அது என்னது இல்லிங்க
நடிகர் சங்கப் பிரச்சினை .
எனக்கு பதவி மோகமில்லை…
நடிகர் சரத்குமார் அறிக்கை!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ..
நடிகர் சரத்குமார் போர்க்கொடி
'தலப்பாகட்டி'யில் நடிகர் சரத்குமார்
இப்படிப்பட்டவரா நடிகர் சரத்குமார்
“சாகும் வரை உண்ணாவிரதம்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்
அதிமுக வேட்பாளரை ஆதரித்து
நடிகர் சரத்குமார் கருத்தால் ..
நடிகர் சரத்குமார் மீண்டும் ..
பாடகரானார் நடிகர் சரத்குமார் ...
தமிழக நடிகர் சரத்குமார் கேள்வி ...
நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து
"இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் ...

No comments:

Post a Comment