Friday 28 August 2015

சந்திராஷ்டமம்-ஒரு ரகசியம்-சந்திராஷடமம் என்றால் என்ன?

சந்திராஷ்மம்-ரகசியம்
சந்திரனின் சிறப்பு அமசங்கள
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன

இந்த சந்திராஷ்டம் ஒரு (C.I.D) போல உதவி செய்யும் அது எப்படி என்றால் ஒருவர் உங்களை எப்படி புரிந்து வைத்து இருக்கிறார் என்பதை நீங்கள் இந்த சந்திராஷ்டம் தினத்தில் கண்டு விடலாம். ..அது எப்படி என்றால் அவர்களுக்கு உள்ள தவறான புத்தி( அல்லது )..உங்களை சில நாட்கள் ஏமாற்றினால் அகபட்டுவிடுவார் ...இதுவும் சந்திராஷ்டம் கொடுக்கும் மனவேதனை தான் ...

இதை எப்படி கண்டு பிடிப்பது என்ற ரகசியத்தை சொல்கிறேன் : சந்திராஷ்டம் தினத்தில் நீங்கள் அவரை பற்றி புரிந்து கொள்ள தோன்றினால் நீங்கள் வழிய போய் பேச வேண்டும் ...CELL PHONE சரிதான் முகத்தை பார்த்து பேசுவது சரிதான் .பேசுங்கள் ..உங்களுக்கு புரியும்..இது ஒருவரின் மனதை கண்டுபிடிக்கும் மாபெரும் தினம் ..இது அருமையான நாள் தான் ..வேதனை பட்டாலும் உண்மை தெரியும் அல்லவா

சந்திராஷடமம் என்றால் என்ன?
ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8ம் இடத்தில் “கோச்சாராப்படி சந்திரன் சுற்றும்பொழுது இரண்டேகால் நாட்களுக்கு இருக்கும்”.  இந்த நாட்களைதான் நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். இது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் தோஷமாகும்.  எடுத்துக்காட்டாக ஒருவருக்கு விருச்சக ராசி ஜென்ம ராசி என்றும், அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும் அமைந்துள்ளது என்றால்,
விருச்சகத்திற்கு எட்டாம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் விருச்சக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். சந்திரனை மனோகாரகன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.  எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது மன உளைச்சல்களையும், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல்,
கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார். இக்காலங்களில் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியதும் அவசியமாகிறது. சந்திராஷ்டம காலத்தில் கெடுதல்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த நாட்களை தவிர்க்குமாறு ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. “பத்தில் குரு பதவியை பறிப்பான்”. “ஏழில் சூரியன் மாங்கல்யத்தை பறிப்பான்”. “எட்டில் சந்திரன் யார் பேச்சையும் கேட்கமாட்டான்” என பல ஜோதிட பழமொழிகள் கூறப்படுகிறது. இந்த பழமொழிகள் எல்லாம் அந்தந்த கிரகங்களின் நீச்ச தன்மையை வைத்து கூறப்பட்டவையாகும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு பத்தாம் வீடான மகரத்தில் குரு நீச்சமடைகிறார், மேசத்திற்கு ஏழாம் வீடான துலாத்தில் சூரியன் நீச்சமடைகிறார். மேசத்திற்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சமடைகிறார். கிரகங்களின் நீச்சதன்மையை அடிப்படையாககொண்டு கெடுபலன்கள் கூறப்படுகின்றன. சந்திரன் மனோக்காரகன் என ஜோதிடத்தில் அழைக்கபடுகிறான். எனவே சந்திரன் நீச்சமடைந்தால் மனோபலம் குறைவாக இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது சந்திரன் எட்டில் மறைந்தால் மனோபலம் மிகவும் குறைந்துவிடும் என்பதை அறியலாம். இதன் காரணத்தினாலேயே சந்திராஷ்டம காலத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறப்படுகிறது. சந்திராஷ்டம காலத்தில் வேறு யாராவது நமக்கு அறிவுரை கூறினால் கூட அதை கேட்டு நடக்கும் மன நிலையில் நாம் இருக்கமாட்டோம் என்பதால், “எட்டில் சந்திரன் யார் பேச்சையும் கேட்க மாட்டான்” என்னும் பழமொழி உருவாகியிருக்கிறது. பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும். சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை

No comments:

Post a Comment