Wednesday 30 September 2015

இலவச ’மருந்து’ சேவை! ஏழைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கும் ’மெடிசின் பாபா’, : இந்தியா : இந்தியா , மெடிசின் பாபா , டெல்லி ,20 லட்சம் மதிப்பில் மருந்துகள்!உயிர் காக்க! உதவி!


ஏழைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கும் ’மெடிசின் பாபா’, : இந்தியா : இந்தியா , மெடிசின் பாபா , டெல்லி

டெல்லியில் வசதி படைத்தவர்கள் வாங்கி பயன்படுத்தாமல் இருக்கும் மருந்துகளை பெற்று ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் மெடிசின் பாபா என்று டெல்லி மக்களால் அழைக்கப்படும் 79 வயது முதியவர் ஓம்கார் நாத் சர்மா.

மெடிசின் பாபா: தென்மேற்கு டெல்லியில் மங்களாபுரி பகுதியில மெடிசின் பாபா என அழைக்கப்படும் ஓம்கார நாத் சர்மா வசித்து வருகிறார். தான் வாடகைக்கு தங்கி இருக்கும் சிறிய வீட்டின் அருகே மருந்து வங்கியும் வைத்துள்ளார். நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனை ரத்த வங்கியில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றியுள்ளார்.

இலவச ’மருந்து’ சேவை: கடந்த 2008-ம் ஆண்டு மெட்ரோ தூண் விழுந்து டெல்லியில் விபத்து ஏற்பட்ட போது கட்டுமானத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்,  பலர் பலத்த காயமடைந்தனர்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்க முடியாததை நேரடியாக பார்த்ததன் காரணமாகத்தான், வசதி படைத்தவர்களிடமிருந்து மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு அளிக்கலாம் என்ற எண்ணம் தமக்கு தோன்றியதாக கூறுகிறார் ஓம்கார நாத் சர்மா. மருந்துகளை சேகரிக்க செல்லும் போது சந்திக்க கூடிய பிரச்சனைகள் குறித்து கேட்ட போது, சிலர் தன் சேவையை புரிந்து கொண்டு வரவேற்பதாகவும், சிலர் தன்னை பார்த்து அச்சம் கொள்வதாகவும் தெரிவித்தார். காவி உடையில் இருக்கும் இவரது ஆடையில் "ராஹத் ஹை ராஹத்' நடமாடும் மருந்து வங்கி என்ற வாசகமும், அவரது அலைபேசி எண்ணும் - 9250243298 அச்சிடப்பட்டுள்ளது. 10 வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால் எழும்பு முறிவினால் நடக்க முடியாமல் இருப்பினும், அதை பற்றி கவலைப்படாமல் செயற்கை கால் கருவிகளோடு தினமும் 10 மைல் தொலைவு நடந்தே சென்று ஏழை எளியவர்களுக்காக மருந்துகளை கேட்பதும், சேகரித்த மருந்துகளை அதன் பயன்பாட்டு காலத்தை பொருத்து தரம் பிரித்து அந்த மருந்துகளை வசதியற்றவர்களுக்கு சென்று வழங்குவது என தனி மனிதனாக, உதவியாளர் ஒருவரின் துணையோடு இதனை செய்து வருகிறார் மெடிசின் பாபா.

20 லட்சம் மதிப்பில் மருந்துகள்: தன் வசம் 20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் இருப்பதாக கூறும் மெடிசின் பாபா, டெல்லியில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மருந்து பெட்டிகளை வைத்துள்ளார்.  இவற்றின் மூலமாக மருந்துகளை சேகரிப்பதாகவும், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு என முக்கிய நோய்களுக்கு பெறக்கூடிய மருந்துகளை குளிர்சாதனப்பெட்டியில் பத்திரமாக வைத்து தேவையானவர்களுக்கு அதனை வழங்குவதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், நெபுலைசர், வீல் சேர், வாக்கர் போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு தனக்கு தெரிந்த தொடர்புகள் வாயிலாக ஏழைகளுக்கு நிதியுதவியும் பெற்று தருவதாகவும் கூறுகிறார் மெடிசின் பாபா.  தாம் சேகரித்த மருந்துகளை மருத்துவ மாணவர் உதவியுடன் தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை தனது மருந்து கிடங்கில் வழங்குகிறார். அவசரம் என அழைப்பவர்களுக்கு மருந்துகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று கொடுக்கிறார்.  தனி நபராக இயங்குவதால் கடும் நிதி நெருக்கடியை சந்திப்பதாக கூறும் மெடிசின் பாபா, நிதி நெருக்கடியைச் சமாளிக்க சில நல்ல உள்ளம் படைத்தவரிடம் நன்கொடையைப் பெறுவதாகவும். மருந்துகளைச் சேரிக்க கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முகாம்களை நடத்துவதாகவும் தெரிவித்தார்.  இந்திய மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் நவீன மருந்துகளை வாங்கும் வசதி இல்லை என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நம்மிடம் இருக்கும் காலாவதியாகாத மருந்துகளை பிறருக்கு கொடுத்து உதவுதன் மூலம் பலரின் கண்ணீரை துடைப்பதும் மட்டும் இன்றி, அவர்களின் உயிரையும் காக்க முடியும்.